தோனி ஓய்வு குறித்த வதந்தி...சாக்ஷி காட்டமான பதிவு...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிக ரசிகர்களைக்
கொண்டவருமான தோனி, கிரிக்கெட்டின் 3 உலகக் கோப்பைகளையும் பெற்றுத் தந்தை ஒரே கேப்டன் ஆவார். இவர் தனது பொறுமை மற்றும் நிதானத்துக்காகவே 'கூல் கேப்டன்' என அழைப்பட்டார்.
சமீபத்தில் நடந்த போட்டியில் அவர் பங்கேற்காத நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார் என எதிர்ப்பார்கப்பட்ட நிலையில்,கொரொனா வந்து அனைத்து தொழில்களையும் முடங்கிவிட்டது. ஐபிஎல் போட்டிகள் நடக்காததால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்ற செய்திகளும் ஊடகங்களில் கசிந்து வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற ஒரு காட்டமான பதிலளித்த சாக்ஷி அந்த பதிவை நீக்கியுள்ளார்.
அதில், கொரோனா ஊரடங்கால் மக்கள் மனதில் ஒரு சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பிரயோஜனமாக காரியத்தில் ஈடுபடுங்கள் என பதிவிட்ட அவர் சில நிமிடங்களில் அப்பதிவை நீக்கிவிட்டார். இந்நிலையில் தோனி ரசிகர்கள் தோனி நெவர் டையர் ( ஒரு போதும் ஒய்வு பெற மாட்டார் ) என்ற ஹேஸ் டேக் உருவாக்கி டுவிட்டரில் டிரெண்டிண்டிங் செய்து வருகின்றனர்.