தோனி விரைவில் ஓய்வு - ரவி சாஸ்திரி அதிர்ச்சி கருத்து !

Last Updated: வெள்ளி, 10 ஜனவரி 2020 (16:17 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விரைவில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அனியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகிறார். ஆனால் அவரை சேர்க்காமல் நிர்வாகம்தான் ஒதுக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அவருக்குப் பதில் ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரைத் தயார் செய்து வருகின்றனர் கோலியும், ரவி சாஸ்திரியும். இந்நிலையில் தோனி மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுபற்றி தெரிவித்துள்ள பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ‘ தோனியின் ஓய்வு பற்றி நாங்கள் இருவரும் கலந்தாலோசித்தோம். அவரது டெஸ்ட் வாழ்க்கை முடிந்துள்ளது. விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் ஓய்வை அறிவிப்பார். இந்த வயதில் அவர் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார். இனி ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாடி அவ உடல் எப்படி ஒத்துழைக்கிறதோ அதைப் பொறுத்துதான் அவர் தொடர்ந்து விளையாடுவது.’ எனக் கூறியுள்ளார்.

இதனால் இனி தோனியை ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும்தான் பார்க்க முடியும் என்ற சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :