வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 மே 2020 (11:08 IST)

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு: தமிழக அரசு!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு.
 
தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
 
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஆணை பொருந்தும் எனவும், ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.