ஓய்வு முடிவை கைவிட்ட பிராவோ – மீண்டும் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் !

Last Modified சனி, 14 டிசம்பர் 2019 (08:53 IST)
வெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ டி 20 போட்டிகளில் தனது பெயரை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்கிந்திய அணியின் ஆல்ரவுண்டரும் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரருமான டிவைன் பிராவோ அக்டோபர் 2018-ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைபெற்றார். இதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தோடு அவர் கொண்ட மோதல் போக்கே காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அணி நிர்வாகம் மாறியுள்ளதால் மீண்டும் தன்னை டி 20 போட்டிகளில் கலந்துகொள்ளும் அணியில் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விரைவில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளதால் அவரின் வரவு அணிக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :