செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (06:49 IST)

ஜடேஜா, தவானுக்கு இடமில்லை: வெற்றிக்கூட்டணி தொடர்கிறது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.



 
 
இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றிருந்தாலும் மூன்று போட்டிகளிலும் ஆடும் லெவன் அணியில் அவர் இடம்பெறவில்லை. இந்த நிலையில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சார் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
மேலும் மனைவிக்கு உடல்நலம் இல்லாத காரணத்தால் முதல் மூன்று போட்டிகளில் தவான் விளையாடவில்லை. தற்போது அவர் விளையாட தயார் நிலையில் இருந்தாலும், அவருக்கு பதிலாக இறக்கப்பட்ட ரகானே இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ளதால் அவருக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கபப்ட்டுள்ளது. தவான் அணியில் இடம்பெறவில்லை. மேலும் ஆடும் லெவன் அணியில் ஏற்கனவே மூன்று போட்டிகளில் விளையாடியவர்களே தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.
 
4வது, 5வது போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் விபரம்:
 
1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா 3. கே.எல். ராகுல், 4. மணீஷ் பாண்டே, 5. கேதர் ஜாதவ், 6. ரகானே, 7. எம்.எஸ். டோனி, 8. ஹர்திக் பாண்டியா, 9. குல்தீப் யாதவ், 10. சாஹல், 11. பும்ரா, 12. புவனேஸ்வர் குமார், 13. உமேஷ் யாதவ், 14. மொகமது ஷமி, 15. அக்சார் பட்டேல்.