தொடர்புடைய செய்திகள்
- எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !
- எக்ஸ்போஸ் ஆகிவிட்டதா தோனி மேஜிக்… ரசிகர்களே ஓய்வு பெற சொல்லி புலம்பல்!
- 20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!
- நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!
- பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!
இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!
கடந்த சில ஆண்டுகளாக சி எஸ் கே அணி ரசிகர்களைப் பொறுத்தவரை அணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தோனி கடைசியாக ஒரு சிக்ஸர் அடித்து விட்டால் பைசா வசூல் எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் இந்த சீசனில் தோனிதான் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு ஆதங்கத்தில் உள்ளனர்.
நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் சி எஸ் கே அணி விளையாடியது. போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 183 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய சி எஸ் கே அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்ததால் தடுமாற்றத்தோடு விளையாடியது. சென்னை அணியின் ஐகான் தோனி, 11 ஆவது ஓவரிலேயே களமிறங்கினாலும் அவர் ஆடிய நிதான ஆட்டத்தால் சென்னை அணியால் வெற்றிப் பெற முடியவில்லை.
இதனால் சில ரசிகர்களே தோனி ஓய்வை அறிவித்து விட்டு செல்லலாம் என புலம்ப தொடங்கியுள்ளனராம். தோனிக்குக் காலில் சில பிரச்சனைகள் இருந்தும் டிக்கெட் விற்பனைக்காக அவரை தொடர்ந்து விளையாட வைத்து வருவதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில் தோனி இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவித்தாலும் அறிவிப்பார் என்று ஒரு தகவலும் பரவி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் தோனி அவ்வாறுதான் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.