1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2024 (19:31 IST)

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்.. ஆரம்பமே மடக்கி பிடிக்குமா சிஎஸ்கே? ப்ளேயிங் 11 விவரம்!

csk vs dc
இன்று மாலை நேர ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதிக் கொள்ளும் நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இதுவரை நடந்த 2 போட்டிகளிலுமே சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் இதுவரை நடந்த 2 போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்த நிலையில் இந்த போட்டியிலாவது தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த போட்டியை பொறுத்தவரை சிஎஸ்கே வெல்லவே சாத்தியம் அதிகம் என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில் டெல்லி வெல்லும் சாத்தியங்கள் குறித்த எதிர்பார்ப்பும் டெல்லி ரசிகர்களுக்கு உள்ளது

 
சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்கிய ராஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்சி, எம் எஸ் தோனி, தீபக் சஹார், துஷார் தேஸ்பாண்டே, முஸ்தபிசுர் ரகுமான், மதீஷா பதிரானா,

டெல்லி கேப்பிட்டல்ஸ் : ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் பொரெல், அக்சர் படேல், ஆண்ட்ரிக் நோர்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

Edit by Prasanth.K