திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2024 (10:02 IST)

IPL 2024: வெற்றியை கண்ணால் பாக்காத டெல்லி.. வெற்றிக்கு மேல் வெற்றியில் சிஎஸ்கே! – இன்று DC vs CSK மோதல்!

csk vs dc
இன்று ஐபிஎல் சீசனின் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் 7.30 மணி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன.



இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. மதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்கின்றன. இரவு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோத உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இதுவரை நடந்த 2 போட்டிகளிலுமே சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. புதிய கேப்டனான ருதுராஜ் கெயிக்வாட் கேப்பிட்டன்சி மீது சிலருக்கு தயக்கம் இருந்தபோதிலும் அவர் சிறப்பான கேப்டனாக செயல்பட்டு நிறைவு அளித்து வருகிறார். அணியில் புதிதாக இணைந்துள்ள ரச்சின், மிட்செல் அணிக்கு கூடுதல் பலம்.


டெல்லி கேப்பிடல்ஸ் இதுவரை நடந்த 2 போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்த நிலையில் இந்த போட்டியிலாவது தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. டெல்லி அணியில் டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஷ் ஓரளவு நன்றாக விளையாடி ஸ்கோர் செய்கின்றனர். காயத்திலிருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் இன்னும் தன் அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்த போட்டியை பொறுத்தவரை சிஎஸ்கே வெல்லவே சாத்தியம் அதிகம் என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில் டெல்லி வெல்லும் சாத்தியங்கள் குறித்த எதிர்பார்ப்பும் டெல்லி ரசிகர்களுக்கு உள்ளது.

Edit by Prasanth.K