1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2024 (19:22 IST)

கடப்பாறை பேட்டிங்கை கதறவிட்டு சன்ரைசர்ஸ் பவுலிங்கை துவம்சம் செய்த குஜராத் அணி!

SRH vs GT
நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை தோற்கடித்து குஜராத் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.



டாஸ் வென்று பேட்டிங்கில் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி ஆரம்ப சில ஓவர்களுக்கு அதிரடி காட்டியது. ஆனால் குஜராத் அணி பவுலர்கள் ரன்களை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் 4 வது ஓவரிலிருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொள்முதல் செய்யத் தொடங்கினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை சேர்த்தது சன்ரைசர்ஸ்.

163 ரன்கள் என்ற எட்டும் இலக்கோடு களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வ்ரிதிமான் சாகா (25), சுப்மன் கில் (36) ஓரளவு ஆடி வெளியேறினாலும். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் 45 ரன்களும், டேவிட் மில்லர் 44 ரன்களும் குவித்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் அதிரடி ஆட்டத்தால் 19வது ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றியது.

Edit by Prasanth.K