வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2020 (12:01 IST)

கொரோனாவில் இருந்து பூரண குணம்…பயிற்சியை தொடங்கிய சி எஸ் கே வீரர்

சி எஸ் கே அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான தீபக் சஹார் பயிற்சியில் கலந்துகொண்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் சிஎஸ்கே பந்து வீச்சாளரான தீபக் சஹாரும் ஒருவர். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.

இதையடுத்து நடத்தப்பட்ட மூன்று சோதனைகளிலும் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளதை அடுத்து அவர் இன்று  முதல் அணியின் மற்ற வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளார். தீபக் சஹாரின் வருகை அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.