வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (09:39 IST)

ஹர்பஜன் சிங் போல தமிழில் டிவிட் செய்த சி எஸ் கே வீரர்!

சி எஸ் கே அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா ஐபிஎல் போட்டிகள் குறித்து தமிழில் டிவீட் செய்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் இப்போது குணமாகி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சி எஸ் கே அணியில் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா ‘அந்த அரபிக் கடலோரம்… அந்தநாள் ஞாபகம்…2020… களத்தில் சந்திப்போம்.’ எனத் தமிழில் ட்வீட் செய்துள்ளார். வழக்கமாக சி எஸ் கே அணியின் வீரர் ஹர்பஜன் சிங்க்தான் இதுபோல தமிழில் டிவீட் செய்வார். இந்த தொடரில் அவர் சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.