இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை: இன்றைய நிலவரம்!!

Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (10:31 IST)
இந்தியாவில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் லட்சக்கணக்கில் உயர தொடங்கியுள்ளது.
 
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 46,59,984 லிருந்து 47,54,356 ஆக அதிகரிப்பு. குணமடைந்தோர் எண்ணிக்கை 36.24 லட்சத்தில் இருந்து 37.02 லட்சமாக அதிகரிப்பு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 77,472 லிருந்து 78,586 ஆக அதிகரிப்பு. 
 
அதேபோல இந்தியாவில் ஒரே நாளில் 94,372 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 78,399 பேர் குணமடைந்துள்ளனர்;  1,114 பேர் உயிரிழந்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :