மேல் மருவத்தூர் உள்ளாட்சி தேர்தல்… போட்டியிடும் பங்காரு அடிகளார் மனைவி & மகன்!
சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய கடைசி தினம் செப்டம்பர் 22 என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 23 என்றும், வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 25 என்றும், அக்டோபர் 6 மற்றும் 9 களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 12 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முழு ரிசல்ட் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேட்புமனுத் தாக்கல்கள் குவிந்து வருகின்றன. இதையடுத்து இப்போது மேல் மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு அப்பகுதியில் பிரபலமாக இருக்கும் ஆதி பராசக்தி சித்தர் பீட அதிபதி பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளர். அவருக்கு மாற்று வேட்பாளாராக அவரின் மகன் அன்பழகன் செந்திலும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.