1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (15:53 IST)

இந்த சீசனிலேயே கோலி கேப்டன்சி நீக்கப்படுவாரா? அதிர்ச்சி செய்தி!

ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து இந்த சீசனோடு விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, நடக்க உள்ள டி 20 கோப்பைக்கு பின்னர் அணிக் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார். அதன் பின்னர் வீரராக மட்டும் தொடர்வேன் என்றும் அறிவித்தார். இந்நிலையில் இப்போது ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பதவியை துறக்க உள்ளார். நடப்பு சீசனுக்குப் பின்னர் அவர் ஆர் சி பி அணியில் வீரராக மட்டும் தொடர உள்ளதாக தெரிவித்துள்ளதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த சீசனிலேயே அவர் பாதியில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. கோலிக்கு பதில் டிவில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.