1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
  4. Cancel IPL hashtag gets trending in twitter

Cancel IPL - டிவிட்டரில் ஹேஷ்டேக் டிரெண்ட்!

Cancel IPL
சமூக வலைத்தளமான டிவிட்டரில்  Cancel IPL என்ற ஹேஷ்டேக்  டிரெண்டாகி வருகிறது. 
 
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நாளை மறுநாள் பஞ்சாப் அணியுடன் மோத புனே செல்ல இருந்தது.
 
இந்நிலையில் டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் டெல்லி அணியின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
 
இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளமான டிவிட்டரில்  Cancel IPL என்ற ஹேஷ்டேக்  டிரெண்டாகி வருகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
டாஸ் வென்ற கொல்கத்தா அணி எடுத்த அதிரடி முடிவு!