வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 மே 2023 (09:00 IST)

’எங்களுக்கு என்ன ஆச்சுன்னு எங்களுக்கே தெரியல’ – வெற்றி குறித்து டேவிட் வார்னர் ஆச்சர்யம்!

David Warner
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை வீழ்த்தியது குறித்து டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பேசியுள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும், கடைசி இடத்தில் உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 130 ரன்களே எடுத்திருந்தாலும், அடுத்து விளையாடிய குஜராத் அணியின் ரன்களை கட்டுப்படுத்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியின் இந்த வெற்றி பலருக்கு எதிர்பாராத ஆச்சர்யத்தை அளித்தது.

இதுகுறித்து போட்டிக்கு பின் பேட்டியளித்த டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் “எங்கள் பவுலர்கள் சிறப்பாக விளையாடினார்கள். எங்கள் பேட்டிங்கில்தான் என்ன சிக்கல் என தெரியவில்லை. நாங்கள் பேட்டிங்கை நேர்த்தியாக விளையாட நினைத்தோம். ஆனால் முடியவில்லை. ராகுல் தெவாட்டியா அவுட் ஆகும்போது நான் பதட்டமாக இருந்தேன். ஆனால் இஷாந்த் சர்மா விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் உறுதியாக இருந்தார்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K