வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 மே 2023 (08:36 IST)

மழையெல்லாம் முக்கியமில்ல.. ‘தல’தான் முக்கியம்! – சிஎஸ்கே டிக்கெட்டுகளுக்காக காத்து கிடக்கும் ரசிகர்கள்!

Chepauk
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் போட்டி டிக்கெட்டுகளை வாங்க மழையில் நனைந்தபடி ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

ஐபிஎல் போட்டியின் 16வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. லீக் போட்டியில் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே தடுமாற்றம் கண்டு வருகிறது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அடுத்தடுத்து வெற்றி பெற தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி வரும் 6ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி என்றாலே பெரும் போர் அளவிற்கு பார்க்கப்படுகிறது. அதுவும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ள நிலையில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இது முக்கியமான போட்டியாகும்.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று காலை 9.30 மணியளவில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த டிக்கெட்டுகளை வாங்குவதற்காக நள்ளிரவு முதலே சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே ரசிகர்கள் வரிசையில் காத்திருக்க தொடங்கியுள்ளனர். இரவு நேரத்தில் மழை பெய்தபோதும் விலகி செல்லாமல் மழையிலும் டிக்கெட்டை வாங்குவதற்காக காத்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K