டிஎன்பிஎல் கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது சேப்பாக் அணி

Last Modified வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (23:09 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சேப்பாக் மற்றும் திண்டுக்கல் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சேப்பாக் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சேப்பாக் அணி இந்த கோப்பையை இரண்டாவது முறையாக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்கோர் விபரம்:

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: 126/8
20 ஓவர்கள்

சசிதேவ்: 44 ரன்கள்
எம்.அஸ்வின்: 28 ரன்கள்
காந்தி: 22 ரன்கள்
சுஷில்: 21 ரன்கள்

திண்டுக்கல் டிராகன்ஸ்: 114/9 20 ஓவர்கள்
சுமந்த் ஜெயின்: 46
விவேக்: 23
அபினவ்: 21இதில் மேலும் படிக்கவும் :