1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Aakash chopra condemns BCCI for revealing about bumrah availability

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லி மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  அடுத்த போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இந்த இந்திய பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக இருக்கும் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. இப்படி பும்ரா மூன்று போட்டிகளில் மட்டும்தான் விளையாடுவார் என்பதை முன்பே அறிவித்தது தவறானது என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் “பும்ரா மூன்று போட்டிகளில்தான் விளையாடுவார் என்பதை ஏன் முன்பே பொது வெளியில் அறிவிக்கவேண்டும்?  அதை ஏன் ரகசியமாக வைத்திருக்கவில்லை? இப்போது அவர் ஒரு போட்டியில் விளையாடிவிட்டார். மீதமுள்ள நான்கு போட்டிகளில் இரண்டில்தான் விளையாடுவார். அதனால் அதைப் பயன்படுத்திக் கொண்டு இங்கிலாந்து அணி அவர்களுக்கு சாதகமாக மைதானத்தை உருவாக்கிக் கொள்வார்கள். ” எனத் தெரிவித்துள்ளார்.
About Writer
vinoth