தொடர்புடைய செய்திகள்
- மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3,000 கோடி தேவை - பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
- வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க தமிழக அரசே துணைபோவதா? சீமான் காட்டம்!
- அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி எச்சரிக்கை
- ஹரே மித்ரோ!! மீண்டும் வருகிறார் மோடி: எப்போ தெரியுமா?
- வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்கள் யார் யார்? முழுப்பட்டியலை அறிவித்த இந்திய ராணுவம்
சீனா திட்டமிட்டே தாக்கியது: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியா மற்றும் சீனா எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இரு நாட்டின் ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற பயங்கர மோதல் இரு நாடுகளை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டை கம்பி உள்பட பல்வேறு ஆயுதங்களால் பயங்கரமான தாக்கியதால் இருதரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால் 20 இந்திய வீரர்களும் 35 சீன வீரர்களும் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய-சீன விவகாரம் குறித்து முதல்முறையாக தொலைபேசியில் பேசி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஒப்பந்தத்தை மீறி சீனா நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார்
ஏற்கனவே இந்தியாதான் எல்லையை மீறி தாக்கியதாக சீனா குற்றம்சாட்டிய நிலையில் தற்போது சீனாதான் எல்லையை மீறிய தோடு ஒப்பந்தத்தை மீறி தாக்கியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
