வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (22:05 IST)

டிக் டாக், ஜூம், யுசி பிரவுசர் உள்ளிட்ட 55 சீன செயலிகளுக்கு தடை !

கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா மீது குற்றம்சாட்டியுள்ளார். இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்,. சீனாவில் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனபிரதமர் நரேந்திரமோடி எச்சரித்துள்ளார்.

அதேநேரம் இந்தியாவுக்கு வெளியே தகவல்களை எடுத்துச் செல்லுவதாகவும் பாதுகாப்புக்கு கவலை அளிப்பதாகவும் உள்ள சீனா தொடர்புடைய 55 செயலிகளை முடக்குவதுடன் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாமென மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளன.

பிரபல பொழுது போக்கு செயலியான டிக்டாக், வீடியோ கான்பரன்சிங் செயலி, யூசி பிரவுசர், ஷேர் நெட், கிளீன் மாஸ்டர் உள்ளிட்ட  சீன செயலிகளின் பட்டியலை மத்திய அரசுக்கு உளவுத்துறை அனுப்பி வைத்துள்ளதாகவும் இவற்றின் ஆபத்துகள் குறித்து சோதனை நடத்தப்பட்டு  முடிவெடுக்கப்படும் எனவும் இந்தப் பரிந்துரை தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.