வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (23:38 IST)

புரோ கபடி 2019: பெங்கால் அணி அபார வெற்றி

புரோ கபடி போட்டிகள் கடந்த ஒன்பது வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் டெல்லி அணி அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து பெங்கால், ஹரியானா, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
 
 
இந்த நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ள பெங்கால் அணிக்கும் மூன்றாம் இடத்தில் உள்ள ஹரியானா அணிக்கும் இடையே இன்று போட்டி நடைபெற்றது. 
 
 
இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பெங்கால் அணியின் அதிரடியை ஹரியானா அணியால் சமாளிக்க முடியவில்லை. ஆரம்பம் முதல் இறுதி வரை போட்டி பெங்கால் அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது
 
 
இறுதியில் பெங்கால் அணி 48 புள்ளிகளும், ஹரியானா அணி 36 புள்ளிகளும் பெற்றதால் பெங்கால் அணி 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்கால் அணியின் மணிந்தர் சிங் இன்றைய போட்டியில் ரெய்டில் மட்டும் தனது அணிக்கு 16 புள்ளிகள் பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது