புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam

தொடரும் தமிழ் தலைவாஸ் தோல்வி: மீண்டு வர வழியே இல்லையா?

புரோ கபடி போட்டி தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருவதை அடுத்து அந்த அணி இனிமேல் மீண்டுவர வழியே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ் தமிழ் தலைவாஸ் 10 தோல்விகளை பெற்றுள்ள நிலையில் நேற்றைய போட்டியில் தோல்வியை அடைந்ததையும் சேர்த்து 11 தோல்விகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
நேற்று நடைபெற்ற ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய தமிழ்தலைவாஸ் ஆக்ரோஷமாக விளையாடினாலும் ஹரியானா அணி வீரர்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து ஹரியானா அணி 43 தமிழ் தலைவாசல் 35 புள்ளிகள் எடுத்ததால் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா அணி, தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது
 
இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் புனே மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் புனே அணி 43 புள்ளிகளும், குஜராத் அணி 33 புள்ளிகளும்  எடுத்தததை அடுத்து புனே அணி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
 
நேற்றைய போட்டியின் முடிவில் டெல்லி, பெங்கால், ஹரியானா, பெங்களூர், மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 16 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று, வெறும் 27 புள்ளிகள் மட்டுமே எடுத்து கடைசி இடத்தில் தமிழ் தலைவாஸ் அணி உள்ளது என்பது பரிதாபத்துக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது