புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam

புரோ கபடி போட்டி: கடைசி இடத்தில் இருந்த பாட்னா 8வது இடத்திற்கு முன்னேற்றம்

புரோ கபடி போட்டி தொடரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடைசி இடத்தில் இருந்த பாட்னா அணி அடுத்தடுத்து பெற்ற இரண்டு வெற்றிகளை அடுத்து எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னும் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
நேற்று நடைபெற்ற புனே அணிக்கு எதிராக நடந்த போட்டி ஒன்றில் பாட்னா அணி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன் விளையாடி 55 புள்ளிகளைப் பெற்றனர். ஆனால் புனே அணியால் 33 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தால் அந்த அணி 22 பொழுது வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த அபார வெற்றியின் மூலம் பாட்னா அணி 35 புள்ளிகளுடன் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது 
 
 
முன்னதாக நடந்த இன்னொரு போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதின. வழக்கம்போல் டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது. டெல்லி அணி 34 புள்ளிகளும் குஜராத் அணி 30 புள்ளிகள் பெற்றதை அடுத்து நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வெற்றி பெற்றது 
 
 
நேற்றைய போட்டிக்கு பின்னர் டெல்லி, பெங்கால், ஹரியானா, பெங்களூர், மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் மூன்று வாரங்களில் மட்டும் போட்டிகள் இருக்கும் நிலையில் டெல்லி அணி கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இதனை அடுத்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் மூன்று அணிகள் எவை எவை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்