1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 11 ஜூன் 2025 (18:54 IST)

4 விக்கெட்டை இழந்தாலும் உறுதியாக நிற்கும் ஸ்மித்.. ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வரும் நிலையில், தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து, ஆஸ்திரேலியா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
 
தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா 20 பந்துகள் விளையாடி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். லாபு சாஞ்சே 17 ரன்களிலும், கேமரூன் கிரீன் நான்கு ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 11 ரன்களிலும் அவுட் ஆகினர்.
 
 இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித் மிக அபாரமாக விளையாடி 65 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். அதேபோல், வெப்ஸ்டார் 29 ரன்களுடன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சற்று முன் வரை ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் ரபாடா மற்றும் மார்கோ ஜென்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
 
Edited by Mahendran