புரோ கபடி: உபி மற்றும் டெல்லி அணிகள் வெற்றி

sivalingam| Last Updated: திங்கள், 16 செப்டம்பர் 2019 (22:49 IST)
புரோ கபடி போட்டி தொடரின் இன்றைய ஆட்டத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன


இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உத்தரப்பிரதேச அணியுடன் ஜெய்ப்பூர் அணி மோதியது. இந்தப் போட்டியின் முதல் பாதி வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், இரண்டாவது பாதியில் உத்தரப்பிரதேசம் சுதாரித்து விளையாடி 38 புள்ளிகள் எடுத்தனர். ஜெய்ப்பூர் அணி 32 புள்ளிகள் மற்றும் எடுத்ததால் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் உத்தரப்பிரதேச அணி வெற்றி பெற்றது.

இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வழக்கம்போல் டெல்லி அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 37 புள்ளிகள் எடுத்து 8 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் 29 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது


இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி அணி 69 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதனை அடுத்து பெங்கால், ஹரியானா, பெங்களூரு மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தலைவாஸ் வழக்கம்போல் கடைசி இடத்தில் உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :