திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (11:41 IST)

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிசிசிஐ பரிசு தொகை அறிவிப்பு!

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிசிசிஐ பரிசு தொகை அறிவித்துள்ளது. 

 
ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா அபாரமாக விளையாடி தங்கம் வென்றார். இந்தியாவுக்கு 100 ஆண்டுகளுக்கு பின் தடகள பிரிவில் கிடைத்த முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிசிசிஐ பரிசு தொகை அறிவித்துள்ளது. இதன்படி தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.
 
வெள்ளி வென்ற, மீராபாய் ஜானு மற்றும் ரவிகுமார் தாஹியாவுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கலம் வென்ற சிந்து, லவ்லினா, பஜ்ரங் பூனியாவுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்பட உள்ளது. மேலும் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு ரூ.1.25 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.