திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (12:22 IST)

மொத்தத் தங்கத்திற்கும் மேலானது இந்த ஒற்றை ஒலிம்பிக் தங்கம்: வைரமுத்து புகழாரம்

கோலாரில் தோண்டி எடுக்கப்படும் மொத்த தங்கத்திற்கும் மேலானது இந்த ஒற்றை ஒலிம்பிக் தங்கம் என்றும் நீரஜ் சோப்ரா வாங்கிய தங்கப்பதக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
 
தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் என்று செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதனையடுத்து தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
நூறு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் இந்தியாவுக்கு தடகள போட்டியில் தங்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு தலைவர்களும் நீரஜ் சோப்ராவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது
 
கோலாரில் தோண்டியெடுக்கப்பட்ட 
மொத்தத் தங்கத்திற்கும் மேலானது 
இந்த
ஒற்றை ஒலிம்பிக் தங்கம்
 
இந்திய தேசியக்கொடியை
ஒலிம்பிக்கில் உயர்த்திப்பிடித்த
நீரஜ்!
உங்களுக்கு எங்கள்
வீர வாழ்த்து