புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (09:06 IST)

தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா; பாராட்டி மணற்சிற்பம் செய்த கலைஞர்!

ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பாராட்டி ஒடிசா கலைஞர் செய்த மணற்சிற்பம் வைரலாகியுள்ளது.

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பல நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்தும் பல வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் சுபேதார் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளார்.

அவருக்கு இந்தியா முழுவதும் பல பகுதிகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவரை வாழ்த்தும் வகையில் மணற்சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.