1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (15:59 IST)

இன்றுடன் நிறைவடைந்தது ஒலிம்பிக் போட்டி: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

கடந்த சில நாட்களாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது.இதனை அடுத்து இறுதி நிகழ்ச்சி சற்று முன் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதில் இந்தியா ஒரு தங்கம் 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 39 தங்கம் உள்பட 113 பதக்கங்களை வென்றுள்ளது
 
சீனா இரண்டாவது இடத்திலும் ஒலிம்பிக் போட்டியை நடத்திய ஜப்பான் மூன்றாவது இடத்திலும் பிரிட்டன் நான்காவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இந்த ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்களை பெற்று 48வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது