புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (16:13 IST)

கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு –நட்சத்திர பவுலர் இடம்பெற்றார்

வெஸ்ட் இன்டீஸ் அணிகளுக்கெதிராக நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித்தொடரின் கடைசி 3 போட்டிகளுக்கெதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளில் ஒன்றில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி டையில் முடிந்துள்ளது.

பேட்டிங்கை பொறுத்தவரை அசுர ஃபார்மில் இருக்கும் இந்திய அணி பௌலிங்கில் சொதப்பி வருகிறது. முதல் ஒருநாள் போட்டில் ஸ்டார் பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாத கத்துக்குட்டி பிளேயர்களோடு விளையாடிய வெஸ்ட் இண்டீஸுக்கு 322 ரன்களை வாரிக் கொடுத்தது. அதேப்போல 2 வது போட்டியிலும் முதலில் விளையாடிய இந்திய அணி 321 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்த போதும் அந்த ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீஸைக் கட்டுப்படுத்த முடியாமல் போட்டி டையில் முடிந்துள்ளது.

இதனிடையே அடுத்து நடக்கப்போகும் 3 போட்டிகளுக்கும் விளையாடும் இந்திய வீரர்களின் பெயர்களை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த பூம்ரா மற்ரும் புவனேஷ்குமார் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது அணிக்கு மேலும் பலத்தை அளித்துள்ளது.

இந்திய அணி விவரம்
விராட் கோலி (கே), ரோஹித் ஷர்மா (து.கே), ஷிகார் தவான், கே எல் ராகுல், அம்பாத்தி ராயுடு, ரிஷப் பாண்ட், எம் எஸ் தோனி (வி.கீ), ரவீந்தர ஜடேஜா, சஹால், புவனேஷ் குமார், ஜாஸ்ப்ரீத் பூம்ரா, கலீல் அஹ்மது, உமேஷ் யாதவ், மனீஷ் பாண்டே.