ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (15:34 IST)

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கிரிக்கெட் அதிகாரிக்கு ஐ.சி.சி நிகழ்ச்சியில் பங்கேற்க தடை ...

அண்மைக்காலமாக நாடுமுழுவதும் புயலாக வீசுகின்ற பெண்கள் மீதான (மீடூ) பாலியல் குற்றச்சாட்டு சம்பவங்கள் மிக முக்கியமான பிரபலங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கின்றன.
இந்நிலையில் இந்திய கிரிகெட் வாரியத்தின் (பிசிசிஐ) ன் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகிக்கும் ராகுல் கோரி மீதும் பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
 
அதாவது மீடூ ஹேஸ்டேக்கில் கோரி மீது குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து  தகுந்த விளக்கம் அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் போர்ட் அவரருக்கு கெடு விதித்திருந்தது.
 
ஆனால் இது பற்றி விளக்கம் அளிக்க தனக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 
அதன் பிறகு  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி )கூட்டம் சிங்கப்பூரில்  இந்த வாரத்தில் நடைபெறவிருந்த நிலையில், ஐசிசி கமிட்டி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கோரிக்கு தடைவிதித்தது. மேலும் அவருக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் பதவி வகிக்கும் அசோக் சவுத்ரி கலந்து கொள்ளக் கூடும் என செய்திகள் வெளியாகின்றன.