முதல் ஒருநாள் போட்டி - தொடக்கத்திலே விக்கெட் இழந்த வெஸ்ட் இண்டீஸ்

shami
Last Modified ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (13:45 IST)
இந்தியா -  வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்திலே விக்கெட் இழந்து தவிக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோல்வியுற்றது.
 
இதையடுத்து இந்தியா -  வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான  5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டி இன்று கவுகாத்தியில் தொடங்கியது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸின்  ஆட்டக்காரரான சந்தர்பால் ஹேம்ராஜ் ஷமி ஓவரில் ஆட்டம் இழந்தார். 5.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.


இதில் மேலும் படிக்கவும் :