உலகப்புகழ்பெற்ற கூடைப்பந்து சாம்பியன் விபத்தில் மரணம்: அதிர்ச்சி தகவல்!

Last Modified திங்கள், 27 ஜனவரி 2020 (07:00 IST)
உலகப் புகழ் பெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் என்பவர் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக பலியாகி உள்ளது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
இந்த விபத்தில் கோப் பிரயன்ட் மட்டுமின்றி அவரது 13 வயது மகளான ஜியன்னா மற்றும் ஏழு பேர் என மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது

என்.பி.ஏவில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றவர் கோப் பிரயன்ட் என்பதும் ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு சாதனை செய்த வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புறநகர் பகுதியில் அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் நொறுங்கியதாகவும் இதுகுறித்த விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது

இருபது வருடங்கள் தொடர்ச்சியாக கூடைப்பந்து விளையாடி கோப் பிரயன்ட் கூடைப்பந்து விளையாட்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார் அவரது மறைவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் கோலிவுட் திரையுலகில் கோப் பிரயன்ட் அவர்களின் தீவிர ரசிகர்களான அனிருத் மற்றும் தனுஷ் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கோப் பிரயன்ட் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :