செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (08:42 IST)

இந்தியாவின் சூப்பர் ரசிகை சாருலதா பாட்டி மரணம் – பிசிசிஐ இரங்கல் !

இந்திய அணியின் சூப்பர் ரசிகையாக இருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சாருலதா பாட்டி மூன்று தினங்களுக்கு முன்னர் மரணமடைந்துள்ளார்.

இந்தியா உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சாருலதா பாட்டி. 87 வயதில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு உற்சாகமாக கொடிகளை அசைத்து இந்திய அணியினரை உற்சாகப்படுத்தினார். போட்டி முடிந்தவுடன் இந்திய அணி வீரர்கள் அவரை சந்தித்து ஆசி பெற்றனர்.

அவரின் ஆசையை ஏற்ற கோலி, அவருக்கு உலகக்கோப்பை முழுவதும் டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில் ஜனவரி 13ஆம் தேதி சாருலதா, வயது மூப்பு காரணமாக 87 வயதில் காலமானார். இதையடுத்து பிசிசிஐ ’இந்தியாவின் சூப்பர் ரசிகையான சாருலதா பாட்டி என்றும் நம் நினைவில் இருப்பார்’ என இரங்கல் தெரிவித்துள்ளது.