1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 25 ஜனவரி 2020 (17:47 IST)

நடன பயிற்சியின் போது உயிரிழந்த மாணவி ...

கர்நாடக மாநிலத்தில் உள்ள டி கொல்லஹள்ளி என்ற ஊரில் விமலா ஹிருதயா மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழாவுக்காக மாணவிகள் சில நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். 
அப்போது, நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர்,   திடீரென மயங்கி விழுந்தார்.
 
அருகில் இருந்த மாணவிகள் அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின் மாணைவியை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றனர்.
 
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், மாணவி மயங்கி கீழே விழுந்த போது, ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த ஆசிரியர் எவ்வித பதற்றமும் இன்றி அமர்ந்திருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ஆசிரியர் அமர்ந்திருந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.