தொடர்புடைய செய்திகள்
- உலகின் மிக நீளமான வென்னிலா கேக்.. கின்னஸில் இடம்பெறப்போகும் நிகழ்வு
- சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்; கேரளாக்கு அடுத்து பஞ்சாப்பிலும் நிறைவேற்றம்
- ”நான் டிவிட் செய்யவில்லை; எனது ஊழியர் தான் செய்தார்” ஜகா வாங்கிய வெங்கையா
- ”திருவள்ளுவர் நாளில் அந்த மகானை வணங்குகிறேன்”.. தமிழில் டிவிட் செய்த மோடி
- பெண் சாமியார் எம்.பி.க்கு விஷத்துடன் வந்த கொலை மிரட்டல்..
திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த தமிழர் மரணம்..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரிசையில் நின்ற தமிழக பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல லட்சம் பக்தர்கள் அனுதினமும் தரிசனம் செய்ய வருகை புரிகிறார்கள். இந்நிலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் சென்றுக்கொண்டிருந்த போது, வரிசையில் நின்ற 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தீடீரென மார்பை பிடித்து கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை தேவஸ்தான அதிகாரிகள் மீட்டு திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
பின்பு அவரது சட்டை பையை போலீஸார் சோதனை செய்ததில் வேலூரில் இருந்து திருப்பதிக்கு வந்ததற்கான பஸ் டிக்கெட் இருந்துள்ளது. இந்நிலையில் இறந்தவர் வேலூரை சேர்ந்தவரா அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
