வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (22:20 IST)

அமலாபால் தந்தை திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் என்பவர் திடீரென இன்று மரணம் அடைந்துவிட்டது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது
 
தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை அமலாபால். இவரது நடிப்பில் உருவான ’அதோ அந்த பரவை போல’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் அமலாபால் தந்தை வர்கீஸ் பால் என்பவர் திடீரென இன்று மாலை உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவரது இறுதி மரியாதை நிகழ்ச்சிகள் நாளை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது அமலாபாலின் தந்தை மறைவு செய்தியைக் கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்