1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Bajrang Bunia won quarter final in Olympics

டோக்கியோ ஒலிம்பிக்; மல்யுத்த போட்டியில் அரையிறுதியில் இந்திய வீரர்!

Olympics
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுவரையிலான போட்டிகளில் இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவிலான மல்யுத்த போட்டியின் கால் இறுதி போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஈரான் நாட்டு வீரரான சியாசி செகாவை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதனால் பஜ்ரங் புனியா அரையிறுத்திக்கு தகுதி பெற்றுள்ளார்.
About Writer
Prasanth Karthick