1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Abudhabi allowed flights from india

இந்தியா டூ அபுதாபி விமான சேவை – 10ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிப்பு!

India
கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளுக்கு இடையேயான விமான சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்தியா – அபுதாபி இடையே விமான சேவை தொடங்க உள்ளதாக எதிகாத் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தீவிரமடைந்த சமயம் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை துபாய் உள்ளிட்ட நாடுகள் நிறுத்தி வைத்தன.

இந்நிலையில் தற்போது எதிர்வரும் 10ம் தேதி முதல் இந்தியாவிற்கு அபுதாபியிலிருந்து விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுபோல பிற நாடுகளில் இருந்து அபுதாபி வந்து இணைப்பு விமானம் மூலமாக மற்ற நாடுகளுக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – இந்தியாவில் கொரோனா நிலவரம்!