1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2021 (22:15 IST)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி!
கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 
 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இன்று காலிறுதி போட்டி நடந்தது. இதில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரபெல் நடால் கிரீஸ் நாட்டு வீரர் சிட்பாஸிடம் மோதினார். இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. அனல் பறந்த இந்த ஆட்டத்தில் கிரீஸ் நாட்டு வீரர் சிட்பாஸிடம் தோல்வியை தழுவினார் நடால். இதனை அடுத்து அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தது அவரது ரசிகர்களை மிகுந்த சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது