டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் தோல்வி !
அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரும் பிரபல தொழிலதிபருமான டிரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம் இன்று தோல்வியில் முடிந்துள்ளது.
அமெரிக்கா நாட்டில் கடந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜோ பிடன் அதிக வாக்குகள் பெற்று அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அனால், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தனது ஆதரவாளர்களை வன்முறையைத் தூண்டியதாக டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது.
எனவே, அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற வன்முறையை அடுத்து, அப்போதைய அதிபர் டிரமப் மீது கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானம், ஏற்கனவே நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய நிறையில் இன்று செனட் சபையில் கொண்டு வரப்பட்டது. அப்போது, 3 ல் 2 பங்கு ஆதரவைப் பெறாததால் இத்தீர்மானம் தோல்வியடைந்தது.
செனட் சபையில் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக5 7 பேரும்,எதிராக 43 பேரும் வாக்களித்தனர்.
டிரம்பின் சொந்தக் கட்யினரான 7 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தாலும், மூன்றில் இரண்டு பங்குகள் வாக்குகள் கிடைக்காததால் இந்தக் கண்டனத் தீர்மானத்திலுந்து டிரம்ப் தப்பித்துள்ளார்.