செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2021 (18:28 IST)

கோலியின் கேப்டன்சியைப் பாராட்டிய தடகளவீரர்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் தோல்விக்காக யாரையும் குறை சொல்லாதது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என தடகள வீரர் யோகான் பிளாக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னணியில் உள்ளது.

இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார். தோல்விக்குப் பின்னர் பேசிய அவர் ‘நாங்கள் போதிய அழுத்தத்தை இங்கிலாந்துக்கு அளிக்க வில்லை. ஆனால் இங்கிலாந்து அணிக்கு போதுமான அழுத்தம் கொடுத்தோம். தோல்விக்காக எந்தக் காரணத்தையும் கூற விரும்பவில்லை. அடுத்து வரும் மூன்று போட்டிகளில் கடும் நெருக்கடியைக் கொடுப்போம்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வீரரான யோகான் பிளாக் ‘கோலி தோல்விக்காக யாரையும் குற்றம் சாட்டாமல் தோல்வியை அப்படியே ஏற்றுக்கொண்டது தனக்கு மிகவும் பிடித்தது. ஒரு தோல்விக்குப்பின் உடனடியாக உற்சாகமாக எழும் கோலியின் கேப்டன் உத்வேகம் எனக்குப் பிடித்துள்ளது.’ எனக் கூறியுள்ளார்.