தொடர்புடைய செய்திகள்
- சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!
- “நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?
- டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!
- சென்னையில் இன்று மின்சார ரயில்கள் ரத்து! எந்தெந்த வழித்தடத்தில்? - முழு விவரம்!
சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!
சர்வதேசக் கிரிக்கெட் தொடர்களை விட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான லீக் தொடராக மாறி வருகிறது ஐபிஎல். உலகில் கிரிக்கெட் விளையாடும் (பாகிஸ்தான் தவிர) நாட்டு வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் செல்கிறது.
இந்நிலையில்தான் பதினெட்டாவது சீசன் நாளை முதல் தொடங்கவுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு தினமும் போட்டிகள் என இந்தியா களைகட்டவுள்ளது. இந்த முறை மெஹா ஏலத்துக்குப் பின்னர் அனைத்து அணிகளும் பல புது வீரர்களோடு களமிறங்குகிறது.
இந்நிலையில் முன்னாள் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆர் சி பி வீரரான ஏ பி டிவில்லியர்ஸ் இந்த முறை சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாது எனக் கூறியுள்ளார். அவர் “சென்னை அணி பலமான அணிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த முறை பெங்களூர், குஜராத், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளே ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது. இது சி எஸ் கே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம்.” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்