திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2023 (11:13 IST)

300ஐ தாண்டிய ஆஸ்திரேலியாவின் ஸ்கோர்.. விக்கெட் எடுக்க இந்திய பவுலர்கள் திணறல்..!

India -australia test
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
நேற்று முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அணியின் நான்கு விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது 
 
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் காவாஜா 140 ரன்கள் எடுத்து இன்னும் விளையாடி வருகிறார். அதேபோல் கேமரூன் க்ரீன் அபாரமாக விளையாடி 75 ரன்கள் எடுத்துள்ளார். 
 
இந்திய அணி இன்று காலை முதல் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஷமி 2 விக்கட்டுகளையும் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆஸ்திரேலிய அணி இதே ரீதியில் சென்றால் 500 ரன்களை முதல் இன்னிங்ஸில் நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva