கவாஜா 104, பிஞ்ச் 93 – இந்தியாவுக்கு 314 ரன்கள் இலக்கு !

Last Modified வெள்ளி, 8 மார்ச் 2019 (17:22 IST)
இந்தியாவுக்கு எதிரான 3 ஆவது போட்டியில் ஆஸி தனது முதல் இன்னிங்ஸில் 313 ரன்களை சேர்த்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20  மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்  தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இன்று மூன்றாவது போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்னும் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். களமிறங்கிய ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் சிறப்பாக விளையாடினர். அவர்களின் விக்கெட்டைக் கைப்பற்ற முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர்.

ஆஸியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிஞ்ச் 93 ரன்களிலும் கவாஜா 104 ரன்களிலும் அவுட் ஆனதை அடுத்து போட்டி இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்தது. அடுத்து வந்த வீரர்களில் மேக்ஸ்வெல் 47 ரன்களும் ஸ்டாய்னஸ் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும் ஷமி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதில் மேலும் படிக்கவும் :