திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2019 (13:19 IST)

ராஞ்சி போட்டியில் ராணுவ தொப்பி! – புல்வாமாத் தாக்குதலுக்கு அஞ்சலி

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20  மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்  தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இன்று மூன்றாவது போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். கடந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியே இந்த போட்டியிலும் விளையாட இருக்கிறது. தொடர்ந்து சொதப்பி வரும் தவானுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த புல்வாமாத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று இந்திய வீரர்கள் அனைவரும் தங்கள் தொப்பிகளுக்குப் பதிலாக ராணுவ தொப்பிகளை அணிந்து விளையாட இருக்கின்றனர்.