ராகுல் உள்ளே ; தவான் அல்லது ராயுடு வெளியே –3 ஆவது ஒருநாள் போட்டி முன்னோட்டம்

Last Modified வெள்ளி, 8 மார்ச் 2019 (10:31 IST)
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற உள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20  மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்  தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இன்று மூன்றாவது போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வென்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. தோனியின் சொந்த ஊரானராஞ்சியில் போட்டி நடைபெறுவதால் அவர், மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஒருவேளை தோனி உலகக்கோப்பைப் போட்டிகளோடு ஓய்வு பெற்றால் அவர் தன் சொந்த மண்னில் விளையாடும் கடைசி போட்டி இதுவாகவே இருக்கும் .

பந்து வீச்சை பொறுத்தவரையில் இந்திய அணி கடந்த இரு ஆட்டத்திலும் சிறப்பாக  செயல்பட்டது.  குல்தீப் யாதவ், பூம்ரா, ஷமி மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். பேட்டிங்கை பொறுத்தவரை இந்திய அணியில் ஷிகர் தவன் மற்றும் அம்பாத்தி ராயுடு ஆகியோர் சொதப்பி வருகின்றனர். அதனால் இன்றைய போட்டியில் இவர்களில் ஒருவர் உட்கார வைக்கப்பட்டு டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ராகுலுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனியும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போராடி வருகிறார். சொந்த ஊரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.இதில் மேலும் படிக்கவும் :