செவ்வாய், 25 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 மார்ச் 2025 (13:17 IST)

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஞாயிறு அன்று சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன் அனிருத் திசை நிகழ்ச்சி நடந்தது. அதுபோல், ஹைதராபாத் - லக்னோ போட்டி நடைபெறும் ஹைதராபாத் மைதானத்தில், இசையமைப்பாளர் தமன் இசை விருந்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மார்ச் 27ஆம் தேதி, ஹைதராபாத் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதும் போட்டி ஆரம்பிக்கும் முன், இசையமைப்பாளர் தமன் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமன், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
"ஹைதராபாத் மைதானத்தில் முதல் முறையாக பாட உள்ளேன். நிதிஷ் ரெட்டி எனக்கு இணையாக பாடுவார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், அனிருத் வழங்கிய இசை நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதுபோல், ஹைதராபாத் மைதானத்திலும் தமனின் இசை நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran