செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 5 அக்டோபர் 2019 (13:18 IST)

அஸ்வின் அபாரப் பந்துவீச்சு – முதல் இன்னிங்ஸை முடித்த தென் ஆப்பிரிக்கா !

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  ரோஹித் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின்  சிறப்பான சதத்தால் 502 ரன்களுக்கு 7 விக்கெட்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதையடுத்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா முதலில் விக்கெட்களை இழந்துத் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்தது.

நேற்று டீன் எலகர் மற்றும் குயிண்டன் டி காக் ஆகியோர் ஆகியோர் அடித்த சிறப்பான சதத்தால் அணி கௌரவமான ஸ்கோரை எடுத்தது. நேற்றைய ஆட்ட முடிவில் 7 விக்கெட்களை இழந்த அணி இன்று தொடர்ந்து விளையாடியது. இன்று விளையாடிய நிலையில் மொத்தமாக 431 ரன்கள் சேர்த்தப் பின்னர் அந்த் அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி சற்று முன்பு வரை 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்களை சேர்த்துள்ளது. ரோஹித் ஷர்மா 50 ரன்களோடும் புஜாரா 24 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.